திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி (சுற்றுச்சூழல் பாசறை) சார்பாக சுற்றுச்சூழல் பாசறை மண்டல பொறுப்பாளர் ஜோசப்செல்வராஜ் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக வெடிக்கும் பெரும் வெடி சத்தம் நில அதிர்வு குறித்து உரிய ஆய்வறிக்கை மற்றும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மண்டலச்செயலாளர் சைமன் ஜஸ்டின், மாவட்ட செயலாளர்கள் கணேஷ்குமார், சங்கிலி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments