ஆரம்பாக்கம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து.... ஓட்டுனர் தப்பி ஓட்டம்.... காவல்துறையினர் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரா, பீகார், ஒரிசா, சென்னை, மகாராஷ்டிரா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றனர். இந்த வாகனங்களில் இருந்து தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தொடர்ந்து கடத்திவரப்பட்டு வருகிறது. இதனை ஆரம்பாக்கம் போலீசார் எளாவூர் ஒரு சோதனைச் சாவடியில் ஒவ்வொரு வாகனங்களை நிறுத்தி கடத்திவரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தும் கைது செய்து சிறையில் அடைத்து வருவது வழக்கமாகி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்களில் அரிசி கொள்ளையர்கள் கடத்தி வரும் நிலையில் சென்னையிலிருந்து ஆந்திரா நோக்கி சென்ற போது ஆரம்பாக்கம் அருகே மினி வேன் திடீரென கவிழ்ந்தது இதை அறிந்த ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருப்பதும் இதனை ஆந்திராவிற்கு கடத்தி கொண்டுச் சென்றதும் என்று தெரியவந்தது. ஆனால் ஓட்டி வந்த டிரைவர் போலீசாரை கண்டு தப்பி ஓடினார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட ரேஷன் அரிசியை உணவுப் பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் இந்த சம்பவம் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
No comments