கும்மிடிப்பூண்டியில் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்
கும்மிடிப்பூண்டியில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி விருந்தினர் மாளிகையில் இருந்து கொடியை அசைத்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் துவக்கி வைத்து கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதில் வட்டார கல்வி அலுவலர்கள் கே,முனிராஜசேகர், ஜி, சுதா எம், சிவகாமி ஏழுமலை மற்றும். கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார உள்ள தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசின் கல்விப் பயலும் மாணவ மாணவிகளுக்கு செயல்படுத்தும் சிறப்பு அம்சங்கள் ஏந்திய விழிப்புணர்வு பதாகை ஏந்தி ஊர்வலமாக ரெட்டம்பேடு கூட்டுச்சாலை வரை. சென்று முடித்தனர் . ஊர்வலத்தில்திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments