பல்லாவரம்: 10,000 க்கும் மேற்பட்ட மக்களை வேறு இடத்திற்க்கு மாற்ற தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் தமிழக அரசு மற்றும அதிகாரிகளை கண்டித்து அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


 சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் 10,000 க்கும் மேற்ப்பட்டவர்களை  வேறு இடத்திற்க்கு மாற்ற தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் தமிழக அரசு, மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து அனைத்து கட்சிகள் இணைந்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக செங்கல்பட்டு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனகை முருகேசன் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி, இந்து பாரத முன்னனி மாநில தலைவர் அனகை ஏ.செல்வம்,  அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 1000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில்  நீண்டகாலமாக வசித்து வரும் அனகாபுத்தூர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்காமல் மக்களை வெளியேற்றி அப்புறபடுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபடுகிறது எனவும் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சாதமாக இச்செயலை செய்து வருகிறது என்றும் இதனை அனைத்து கட்சியினரும் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் அனகாபுத்தூர் பகுதி மக்களின் வாழ்வாதரத்தை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments