காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் மே 12ல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குன்றத்தூர் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பால்குடம் ஏந்தி ஊர்வலமாக முருகன்கோவிலில் வந்தடைந்து சுமார் ஆயிரத்துக்கு 1001 மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து எடப்பாடியார் அவர்களை 2026 தமிழக முதலமைச்சர் ஆக்கு வோம் என வேண்டி சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில். ஸ்ரீ பெருமந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குன்றத்தூர் ஒன்றிய கழகச் செயலாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான. கே. பழனி ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்கள் வைகைச் செல்வன், வி.சோமசுந்தரம் தலைமையில் பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக எடுத்து சென்று பாலபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
இதில் வாலாஜாபாத் பா.கணேசன், அம்மா பேரவை துணைச் செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் இம்தியாஸ், 26வது வார்டு செயலாளர் பி.முருகவேல், படப்பை ஆர்.மாரி, காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வெங்கடேசன், தொழில்நுட்ப அணி நடுவை ரகுவரன், உட்பட பலர் உடன் இருந்தனர்.

0 Comments