சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் திடீர் ரத்து..... பயணிகள் அவதி - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 21, 2025

சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் திடீர் ரத்து..... பயணிகள் அவதி

 


சென்னை விமான நிலையத்தில் இன்று மாலையில் இருந்து, நள்ளிரவு வரை 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த விமானங்கள் திடீர் ரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை. ஆனால், நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment