ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தூக்கநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியம் கொங்கர் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குண்டேரி பள்ளம் ஓடையில் காற்றாட்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தரைப் பாலத்தை தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.கந்தசாமி , கோபி சார் ஆட்சியர் சிவானந்தம், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் , ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் ஆகியோர் பார்வையிட்டார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தூக்கநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜம்பு (எ) சண்முகம் , கோபிசெட்டிபாளையம் நகர திமுக செயலாளரும், கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் என்.ஆர். நாகராஜ், கோபி ஒன்றிய செயலாளர் முருகன், நம்பியூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சென்னிமலை, ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவேங்கடம், மாநில, மாவட்ட , ஒன்றிய , நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments