2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி உறுதிக்கு இங்கு கூடியிருக்கும் அண்ணாமலை சேரி மக்களே சாட்சி.... திருவள்ளூர் மாவட்ட செயலாளர் விஜயகுமார் பேச்சு - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 21, 2025

2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி உறுதிக்கு இங்கு கூடியிருக்கும் அண்ணாமலை சேரி மக்களே சாட்சி.... திருவள்ளூர் மாவட்ட செயலாளர் விஜயகுமார் பேச்சு


 திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய தலைமை அண்ணாமலைச்சேரி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கொடி ஏற்றி  நலத்திட்ட வழங்கும் விழா மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

 இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட மீனவர் அணி அருள்தாஸ் எம் ஜி மீனவர் அணி இ பிரேம் முன்னிலை வைத்தனர் மாவட்ட இணைச் செயலாளர் சிலம்பரசன் அண்ணாமலைச்சேரி பகுதியைச்  சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இதில்  கலந்து கொண்டு நலத்திட்டங்கள் வழங்கி பேசிய மாவட்ட செயலாளர் விஜயகுமார் கும்மிடிப்பூண்டி பொன்னேரி தொகுதிகளில் தலைவர் ஆணைக்கிணங்க பொறுப்பாளர்கனள் ஒன்றி நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் சந்தித்து தொகுதிகள்  உள்ள கிராமங்களில் அடிப்படை குறைகளை கண்டறிய உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக அண்ணாமலை சேரி பகுதியில் வருகை தந்ததற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது இங்கு கூடியிருக்கும் பெண்கள் ஆண்கள் பார்த்தவுடன் இந்தக் கூட்டம் நலத்திட்டங்களுக்கு வந்த கூட்டமா இல்ல வெற்றி விழா கூட்டமா என்று தெரியவில்லை வரும் 26 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில். வெற்றி என்பதை நினைக்கும் வகையில் கூடியிருக்கும்  கூட்டத்திற்கு மிக்க நன்றி என்று கூறினார்.

 உங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து தலைவரிடம் தெரிவிப்பேன் என்று கூறினார் இந்நிகழ்ச்சியில் சிரளப்பாக்கம் ஊராட்சி மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் பூத் கம்பெனி நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் ஒன்றிய நகர  நிர்வாகிகள் தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment