தோரணமலை முருகன் கோவில் கிரிவல பாதை சீரமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.... அமைச்சருக்கு, முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நன்றி......


தோரணமலை முருகன் கோவில் கிரிவல பாதை சீரமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு,  முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நன்றி தெரிவித்தார்.

முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், தமிழக  இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவை நேரில் சந்தித்தார். அப்போது, நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்  தென்காசி மாவட்டத்திற்கு தனி இணை ஆணையர்  அலுவலகம் அமைக்கப்படும் என்றும், தோரணமலை முருகன் கோவில் கிரிவலப் பாதையை சீரமைத்து சாலை அமைத்துக் கொடுக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கி அறிவித்தமைக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் திப்பணம்பட்டி திப்மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு இடவசதி இல்லாததால் பள்ளி மாணவ, மாணவியர்கள் மரத்தடியிலும் ஆய்வக அலுவலகத்திலும், வராண்டாவிலும் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே திப்பணம்பட்டியில் உள்ள திருமலை குமாரசாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலம் 4.5 ஏக்கர்  நிலத்தை, பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நீண்ட நாள் குத்தகையின் பேரில் வழங்கிடும் வகையில், விரைவில் அந்த பள்ளிக்கூடத்திற்கு கட்டிடம் கட்ட அறநிலைத்துறை இடத்தை ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை மனுவை நினைவு படுத்தி நிறைவேற்றிட கேட்டுக்கொண்டார்.

அப்போது,  மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமித்துரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் காசி தர்மம் துரை, ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன் லால், முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments