தில்லை குழுமத்தின் நிறுவனத் தலைவர், தொழிலதிபா் டாக்டர்.எஸ்.தேவராஜ் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு 3000 பேருக்கு அன்னதானம் - MAKKAL NERAM

Breaking

Saturday, May 10, 2025

தில்லை குழுமத்தின் நிறுவனத் தலைவர், தொழிலதிபா் டாக்டர்.எஸ்.தேவராஜ் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு 3000 பேருக்கு அன்னதானம்


செங்கல்பட்டு மாவட்ட மாணவரணி இணை செயலாளா் தாம்பரம் டி.தில்லைராஜ் அவா்களின் தந்தை தாம்பரம் தில்லை குழுமத்தின் நிறுவனத் தலைவர் தொழிலதிபா் டாக்டர்.எஸ்.தேவராஜ் அவா்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு மேற்கு தாம்பரம் சண்முகம் ரோடு தில்லை காம்ப்ளக்ஸ் அருகில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தி பின்னர் 3000போ்க்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட  செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளா் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற தலைவா் முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா, தாம்பரம் மத்திய பகுதி கழக செயலாளர் எல்லாா்செழியன், தாம்பரம் கிழக்கு பகுதி கழக செயலாளர் எம்.கூத்தன், மேற்கு பகுதி செயலாளர் கோபிநாத், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வேலு, திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான நட்ராஜ் தேவ் மற்றும் தாம்பரம் மாநகர பகுதி கழக நிா்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment