எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு 3000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி சென்னை புறநகர் மாவட்டம், சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி பள்ளிக்கரணை நீலாம்பாள் மண்டபத்தில் சுமார் 3000 நபர்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத்தினாளிகளுக்கு சைக்கிள், மகளிருக்கு புடவை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன் தலைமையில் கழக மருத்துவ அணிச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பி.வேணுகோபால், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சிங்காரம், கழக பாசறை துணைச் செயலாளர் எஸ்.சிவக்குமார் ஆகியோர் வழங்கினர்.
மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சி.ஆர்.சூர்யபிரபா ஏற்பாட்டில் பகுதி கழகச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் வி.குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழக இலக்கிய அணி துணைச் செயலாளர் எம்.ஜி.சக்திவேல், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் எஸ்.இந்திராணி, கழக வர்த்தக அணி துணைச் செயலாளர் வி.பார்த்தசாரதி, மாவட்டக் கழக இணைச் செயலாளர் ஜெ.எல்.லஷ்மி, மாவட்டக் கழக துணைச் செயலாளர் எம்.பி.கண்ணபிரான், பகுதி கழகச் செயலாளர்கள் ஜி.எம்.ஜானகிராமன், எம்.கே.பழனிவேல், சென்னை மாநகராட்சி கழக குழுத் தலைவர் கே.பி.கே.சதீஷ்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் எஸ்.செல்வராணிசுந்தர், எஸ்.எம்.தனசேகர், எஸ்.விஸ்வநாதன், பகுதி கழக துணைச் செயலாளர் எஸ்.சொக்கலிங்கம், வட்டக் கழக, நகர, வார்டு செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பி.சிவப்பிரகாசம், கே.விஜய்குமார், வி.எஸ்.டி.பிராமிஸ் அம்பேத்கர், இராம.சேகர், எம்.டில்லிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments