மதிமுகவின் 32ஆம் ஆண்டு துவக்க விழா.... முடிச்சூரில் அக்ஷயா முதியோர் இல்லத்தில் காலை உணவு மற்றும் கழக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் புனித தோமையார்மலை ஒன்றிய முடிச்சூர் ஊராட்சி சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காலை உணவு முடிச்சூரில் அக்ஷயா முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் முடிச்சூர் ஆர்.ஏ.ஜெய்சீலன் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் மாவை மகேந்திரன் கலந்துகொண்டு அக்ஷயா முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் க.ஹேமநாதன், மாவட்ட அவை தலைவர் படப்பை க.செல்வம், பம்மல் பகுதி செயலாளர் பிரவீன் மற்றும் முடிச்சு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 32ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முடிச்சூர் பேருந்து நிலையம், அட்ட கம்பெனி ஜங்ஷன், அம்பேத்கர் திருமண மண்டபம், லட்சுமிநகர் பேருந்து நிலையம் நான்கு இடத்தில் கழக கொடியேற்றி நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் க.ஹேமநாதன், மாவட்ட அவை தலைவர் படப்பை க.செல்வம், பம்மல் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டு கழக கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் இந்த நிகழ்ச்சியில் முடிச்சூர் கழக நிர்வாகிகள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments