மதிமுக 32ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாம்பரத்தில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் பகுதி கழகத்தின் சார்பில் தாம்பரத்தில் 32ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா தாம்பரம் பகுதி கழகச் செயலாளர் துரை மணிவண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் மாவை மகேந்திரன் கலந்துகொண்டு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரோஸ் மில், நீர் மோர், குளிர்பானங்கள், தர்பூசணி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் குரோம்பேட்டை நாசர், முடிச்சூர் ஜெயசீலன், மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் ஹேமநாதன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் கோபிநாத், தும்மா பிரான்சிஸ், டிடிகே சந்தானம், பம்மல் பிரவீன் குமார், ராஜா முகமது, திருநீர்மலை பிரேம்குமார், ராமையா, பழக்கடை இரா.அன்பு, சிறை சேகர், சுகுமார், ஷாஜகான், டிராவல்ஸ் சிவா, அருள், சஞ்சய், திரு, தாமஸ், குமரன், சரவணன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments