இலஞ்சி திருவிலஞ்சி குமாரர் கோவில் தேரோட்டம்..... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
இலஞ்சி அருள்மிகு திருவிலஞ்சிக் குமாரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி அருகேயுள்ள இலஞ்சி அருள்மிகு திருவிலஞ்சி குமாரர் கோவில் சித்திரை திருவிழா மே 1ந்தேதி கொடியேற்றத்துனடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் தினந்தோறும் காலை, மாலை அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவில், 7ம் திருநாள் அன்று மாலையில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும், இரவு நட ராஜருக்கு வெள்ளை சாத்தி அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர். தேரோட்ட விழாவில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன், கோவில் செயல் அலுவலர் சுசீலா ராணி, அறங்காவலர் குழு தலைவர் பூவையா, அறங்காவலர்கள் கதிரவன், இசக்கி,ராஜேந்திரன், இசக்கியம்மாள், கட்டளை தாரர் ஆறுமுகப்பாண்டியன், ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், பேரூர் செயலாளர் முத்தையா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments