• Breaking News

    குடியரசு தலைவரின் சபரிமலை வருகை ரத்து

     


    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் பயணமாக 18ம் தேதி கேரளா செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் 19ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி அந்த இரு நாட்களும் கோவில் நடை திறக்கப்படும் என்று சபரிமலை தேவசம்போர்டு தெரிவித்தது.

    இந்நிலையில், ஜனாதிபதி முர்முவின் சபரிமலை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழ்நிலையில் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    No comments