பொன்னேரி: ஆசானபூதூர் செல்லியம்மன் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஆசானபூதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் மிகவும் பழமையானது இத்திருக்கோவிலை பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புனரமைக்கப்பட்ட இத்திருத்தலத்தின் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்தன.
அதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆம் தேதி கணபதி ஹோமம் ,நவகிரக ஹோமம், கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. அதனை தொடர்ந்து இறுதி நாளான இன்று பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர் அப்போது குடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் நாகசாலை உபயதார்கள் திருவேங்கட முதலியார் குடும்பத்தினர் பூமிநாதன் முதலியார் குடும்பத்தினர் சங்கர் முதலியார் குடும்பத்தினர் செய்திருந்தனர் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆசான பூதூர்கிராம மக்கள் செய்திருந்தனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ் ஒப்பந்தக்காரர் ஜோதீஸ்வரன் ஆசான பூதூர் சம்பத் தாத்து தமிழரசன் மணி ஹரி முதலியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பொன்னேரி வேம்பாக்கம் மெதுவூர் ஆகிய பகுதிகள் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
No comments