• Breaking News

    அக்னி நட்சத்திரம் இன்று முதல் துவங்கிய நிலையில் நாகை அருகே திருக்குவளை ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் வெயிலின் தாக்கம் குறைய வேண்டி சிறப்பு யாகம்


    கத்திரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் இன்று துவங்கி மே.28 வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பாகவே நாகை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக இருந்து வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டியும், அவ்வபோது கோடை மழை பெய்து குளிர்விக்க வேண்டி திருக்குவளை சமத்துவபுரத்தில் உள்ள ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் இன்று நடைபெற்றது. 

    வெயிலின் தாக்கம் குறைய வேண்டி அம்மனுக்கு இளநீர், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டும் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கடத்துப் புனித நீர் கொண்டும்  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு ரோஸ் மில்க்‌ மற்றும் அன்னதானம்  வழங்கப்பட்டது.

    கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்


    No comments