ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா
ஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரத்தில் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடைப்பெற்றது. சங்க தலைவர் தனசேகர் தலைமை வகித்தார். சங்க செயலாளர் முத்துகனி, பொருளாளர் முத்துராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம், தவசி, பி.அற்புதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அற்புதராஜ் வரவேற்றார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வணிகர் சங்க பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் ஆர்.கே. காளிதாசன், வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணை தலைவர் கோல்டன் செல்வராஜ், கடங்கனேரி பஞ்சாயத்து தலைவர் அமுதா தேன்ராஜ், தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், வடக்கு மாவட்ட பொருளாளர் ஐ.வி.என் கலைவாணன், ஆலங்குளம் ஆலை அதிபர் சங்கம் ரவி முத்தையா, நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் பி.டி.சின்னத்துரை பொருளாளர் முகமது இப்ராஹிம் மாவட்ட துணை தலைவர் பரமசிவன், பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயலாளர் எஸ்பி கண்னன், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ் செல்வி, பாலகுமார், முன்னாள் கவுன்சிலர் தேன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பத்மராஜ், பொன்மனிராஜா சுமித், முருகன் கனகராஜ், ஜெபரத்தினம், மனித்துரை அந்தோணிச்சாமி, எழுத்தர் கண்ணன், அரிகரசுதன், சந்திரசேகர், காசி, சிங்கத்துரை வேதமுத்துராஜா, விஜயராம், மாதவன், முத்துசாமி, உள்பட வியாhரிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
No comments