நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குஜராத் பயிற்சியாளர் நெஹராவுக்கு அபராதம் - MAKKAL NERAM

Breaking

Thursday, May 8, 2025

நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குஜராத் பயிற்சியாளர் நெஹராவுக்கு அபராதம்

 


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் மும்பையில் அரங்கேறிய மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் (18 ஓவர் முடிவில்) மழை கொட்டி தீர்த்த பிறகு குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹரா, நடுவர்களை பார்த்து ஆட்டத்தை உடனடியாக தொடங்கும்படி கூறினார். அப்போது நடுவர்களுக்கும், நெஹராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நடுவர்களுடன் காரசாரமாக மோதிய நெஹரா மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக அளிக்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment