கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றம் திரளான பக்தர்கள் பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Wednesday, May 21, 2025

கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

 


நாகப்பட்டிணம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கன்னியில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆலயம் மற்றும் ஆலயத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன முன்னதாக ஆலயத்தை சுற்றி உள்ள பகுதியில் கொடி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

 திருக் கொடியினை தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் புனிதம் செய்து திருக்கொடியானது ஏற்றப்பட்டது ஆயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது ஆலயத்தின் பங்குத்தந்தை டேவிட் செல்வகுமார் மற்றும் அருட்தந்தையர்கள்  கலந்து கொண்டனர். இதில் கிராமத்து தலைவர் செயலாளர் மற்றும் சுற்றி உள்ள பகுதியில் உள்ள மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி வருகின்ற (31.05.25) அன்று இரவு நடைபெறும் என்பது குறிப்பிடக் தக்கது.


நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் ஜி. சக்கரவர்த்தி 


No comments:

Post a Comment