• Breaking News

    அதிமுகவில் இணைக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கும்மிடிப்பூண்டியில் உற்சாக வரவேற்பு


      திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கே.எஸ்.விஜயகுமார் அதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பின் மீண்டும் இணைக்கப்பட்ட நிலையில் கும்மிடிப்பூண்டிக்கு வருகை தந்த அவருக்கு அதிமுகவினர் சிறப்பான வரவழைப்பு அளித்தனர்.

    கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டதை ஒட்டி அவர் கும்மிடிப்பூண்டியில் முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு  புதுவாயலிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட கார்களில் அதிமுகவினர் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாரை கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதிக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின் அப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கே.எஸ்.விஜயகுமார் மாலை அணிவித்தார். பின் அவருக்கு சால்வை அனுபவித்த அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் மாலை அணிவித்தார். பின்னர் கும்முடிபூண்டி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கும் முன்னாள் எம்.எல்.ஏ  கே.எஸ்.விஜயகுமார் மாலை அணிவித்தார். 

    தொடர்ந்து அங்கு 200க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் குவிந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி  முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு மாலை, கிரீடம் சால்வை அணிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த நிகழ்வில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் டி.சி.மகேந்திரன்,திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இமயம் மனோஜ், அதிமுக நகர செயலாளர் எஸ்.டி.டி. ரவி, அம்மா பேரவை இணை செயலாளர்எம் எஸ் எஸ் சரவணன்.மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் எல்.சுகுமாரன் அண்ணா தொழிற்சங்கம் மோகன், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ் குமார், டேவிட் சுதாகர், பி.எட்டியப்பன், நகரத் தலைவர் மு.க.சேகர், அதிமுக நிர்வாகி எம்.ஏ.மோகன்,  தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.ராஜா, அதிமுக நிர்வாகிகள் விஸ்வநாதன், பாசறை சரவணன் ஏழுமலை ஜெராக்ஸ் சுந்தர்ராஜன் எம்.எஸ்.எஸ்.வேலு ஹோட்டல் விஸ்வநாதன். மகளிர் அணி நிர்வாகிகள்.உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    No comments