திருக்குவளை அருகே கொட்டும் மழையில் பூதகண வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதியுலா புறப்பாடு


நாகை மாவட்டம் திருக்குளை அடுத்த வலிவலத்தில் இருதய நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமான அருள்மிகு இருதயமலநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த மே.3ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமர்சியாக நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வசந்த  உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் சோமஸ்கந்தர் நீலோத்பாலாம்பிகையுடன் எழுந்தருளினார். மூலவர் சந்நிதியில் சிவ நடனத்துடன் கோயிலை சுற்றி எடுத்துவரப்பட்டு பின்னர் வசந்த மண்டபத்தில் எழுந்தருள மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கொட்டும் மழையிலும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்பாடு பூதகண வாகனத்தில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன் 


Post a Comment

0 Comments