மட்டன் குழம்பு கேட்ட வாடிக்கையாளருக்கு தவளை குழம்பு கொடுத்த ஓட்டல் - MAKKAL NERAM

Breaking

Sunday, May 4, 2025

மட்டன் குழம்பு கேட்ட வாடிக்கையாளருக்கு தவளை குழம்பு கொடுத்த ஓட்டல்

 


சென்னையில் ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட போது, மட்டன் குழம்பில் முழு தவளை கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பூந்தமல்லி பஸ் ஸ்டாப் அருகே செயல்பட்டு வரும் நாவலடி கொங்குநாடு என்ற தனியார் ஓட்டலில் சாப்பிட வந்த ஒரு குடும்பத்தினர் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். 

அப்போது, கடையின் ஊழியர் கொண்டு வந்த மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றுள்ளனர்.அதில், முழு தவளை ஒன்று உயிரிழந்த நிலையில், சாப்பிடும் இலையில் பரிமாறப்பட்டுள்ளது. இதனைக் கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் கேட்ட போது, அவர்கள் உரிய பதிலை அளிக்காமல், மழுப்பியுள்ளனர்.

இதையடுத்து, தவளை இருந்த உணவை வீடியோவாக பதிவு செய்து விட்டு, சாப்பிட்ட உணவுக்கு பணத்தை கொடுத்து விட்டு வாடிக்கையாளர் சென்றுள்ளார். மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க இருப்பதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment