செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வடக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி அறிவுறுதுதலின்படி கோடை வெய்யிலின் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் திறப்பு விழா 15வது மாமன்ற உறுப்பினர் 15வது வட்ட கழகச் செயலாளர் டி.வி.ராஜா என்கின்ற ராஜேந்திரன் தலைமையில் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் டி.வி.ஆர் கௌதம் பாபு ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல குழு தலைவர், பல்லாவரம் வடக்கு பகுதி கழகச் செயலாளர் இ.ஜோசப் அண்ணாதுரை கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தாகம் தீர்க்க தர்பூசணி இளநீர் குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி கழகச் செயலாளர் இ.எஸ். பெர்னாட், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோ.ஜானகிராமன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் பி.கே.ஏ.சத்திய பிரபு, மாணவர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெ.இன்சமாம், பகுதி இளைஞரணிகள் அமைப்பாளர் சரத் வெங்கடேசன் மற்றும் முரசொலி ராஜன், 15வது வார்டு இளைஞர் அணி செயலாளர் எஸ்.சரவணபாலன் திமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 Comments