• Breaking News

    செங்கம் முறையாறு பூங்காவில் மது பிரியர்கள் அட்டகாசம்



    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முறையாறு உள்ள அம்மா பூங்காவில் தினந்தோறும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்து உடற்பயிற்சி செய்வது வழக்கம்.


    இந்நிலையில் பூங்காவில் இரவு நேரங்களில் சமூகவிரோதிகளும் மது பிரியர்களும் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கங்கே உடைத்து விட்டு செல்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவிற்கு வருவதற்கு அச்சப்படுகின்றன.


     பூங்காவிற்கு உள்ளே ஒரு சில இடங்களில் குப்பை கிடமாக மாறி உள்ளது இதை விரைவில் சரி செய்து சமூக விரோதிகள் மீதும் மது பிரியர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பூங்கா பராமரிப்பு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர் S.சஞ்சீவ்

    No comments