பம்மல் தெற்கு பகுதி 11வது வட்ட 400 வது பூத் வாக்கு சாவடி கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Sunday, June 15, 2025

பம்மல் தெற்கு பகுதி 11வது வட்ட 400 வது பூத் வாக்கு சாவடி கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது


காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பம்மல் தெற்கு பகுதி 11வது வட்ட 400 வது பூத் வாக்கு சாவடி கழக செயல்வீரர்கள் கூட்டம் பம்மல் ஆதாம் நகரில்‌ 400வது வாக்கு சாவடி நிலை முகவர் பிஎல்ஏ-2 சி.வெள்ளையப்பன் தலைமையில் 11வது வட்டக் கழக செயலாளர் எம்.சாலமன் என்கின்ற சுகுமாரன் வரவேற்பிலும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் வே.க.தன்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக 1வது மண்டல குழு தலைவர் பம்மல் தெற்கு பகுதி கழகச் செயலாளருமான வே.கருணாநிதி, பல்லாவரம் தொகுதி பொறுப்பாளர் கழக சிறுபான்மை நல உரிமை பிரிவு துணைச் செயலாளர் ரபி அகமது ஆகியோர் கலந்து கொண்டு பூத் வாக்கு சாவடி கழக செயல் வீரர்களுக்கு எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் வி.ரவிச்சந்திரன், இரா.கந்தவேலு, செ.அமிர்தராஜ், வே.க.புஷ்பராஜ், மு.சதீஷ், ம.இன்பராஜ், ஏ.வினோத்குமார், என்.ஜீவா மற்றும் 400வது பூத் வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியில் 100வது பூத்து இளைஞரணி ர.அப்பு நன்றி உரையாற்றினார்.

No comments:

Post a Comment