ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 19 கிலோ கஞ்சா பறிமுதல்
ஒடிசாவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இன்று எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் ரெயிலில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் பையில் மறைத்து கொண்டுவரப்பட்ட 19 கிலோ எடைகொண்ட கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 9.50 லட்ச ரூபாய் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த இளைஞரையும் ரெயில்வே போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் பின்னர் மாநில போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments