• Breaking News

    டெஸ்ட் கிரிக்கெட்..... தோனியின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்

     


    இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது. ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 65 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 3,000 (76 இன்னிங்ஸ்) ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.

    இதற்கு முன் 144 இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்திருந்த எம்.எஸ்.தோனியின் சாதனையை பண்ட் முறியடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 63 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களை கடந்து இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில பண்ட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி 6 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது தோனியின் அந்த வாழ்நாள் சதனையை தகர்த்துள்ள பண்ட் புதிய வரலாறு படைத்துள்ளார்.


    அந்த பட்டியல்:


    1. ரிஷப் பண்ட் - 7 சதங்கள்


    2. மகேந்திரசிங் தோனி - 6 சதங்கள் 


    3. விருத்திமான் சஹா - 3 சதங்கள்

    No comments