• Breaking News

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் புதிய CT SCAN , DIGITAL XRAY, Fluoroscopy திறந்து வைப்பு

     


    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 2.81 கோடி மதிப்பீட்டில் புதிய CT SCAN , DIGITAL XRAY, Fluoroscopy ஆகிய கருவிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    No comments