• Breaking News

    சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது


    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில்  தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் ( FOSTAC ) சத்தியமங்கலம் செட்டிநாடு ரெஸ்டாரன்டில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் சத்தியமங்கலம் உணவு பாதுகாப்பு அலுவலர் Dhanfiya Banu தலைமையில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் ஹோட்டல், பேக்கரி, இனிப்பு, காரம் கடைக்காரர்கள்,  உணவு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

     இந்த பயிற்சியில் பங்கேற்பதன் மூலம் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தரநிலைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில்  சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க தலைவர் எஸ்.என்.ஜவஹர், அனைத்து வணிகர் சங்க செயலாளர் எஸ்.ஏ.சேவியர், அனைத்து வணிகர் சங்க பொருளாளர் ச.கி.நாகராஜ், அனைத்து வணிகர் சங்க துணை தலைவர் எஸ்.ஏ.ஜாகீர் உசேன், அனைத்து வணிகர் சங்க துணை செயலாளர்கள் எஸ்.ராம்குமார், கி.சசிக்குமார், எஸ்.சதீஸ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ராஜா மாதவன், சிகரங்கள் கமலகண்ணன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

     மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.




    No comments