• Breaking News

    பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்


    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருள்மிகு பாவணி அம்மன் திருக்கோவில் வளாகத்தில்  மாவட்ட நிர்வாகம் (ம) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாபெரும் நெகிழி கழிவுகளை சேகரிப்பு மற்றும் திருக்கோவில் வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப்  துவக்கி வைத்தார்கள்.

    பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்கள் தெரிவிக்கையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளுவர் மாவட்டத்தில் பல்வேறு தூய்மை தொடர்பான செயல்பாடுகள் செய்து வருகிறோம் .தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இந்து சமய அறநிலையத் துறை  ஆகிய துறைகள் சார்பாக தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இக்குழுவினர் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையான பகுதிகளை தேர்வு செய்து தூய்மை செய்து வருகிறது பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்களான பேருந்து நிலையங்கள் ஒரு வாரமும், அரசு அலுவலகங்கள் சார்ந்த தூய்மை பணிகள் ஒரு வாரமும் எடுத்து ஒவ்வொரு பணியாக செய்து வருகிறது. அந்த வகையில் இன்று கோவில் மற்றும் அதனை  சார்ந்த பகுதிகளில் நெகிழி கழிவுகளை மற்றும் பிற கழிவுகளை நீக்கி தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    நெகிழி சார்ந்த பொருட்களை மறுசுழற்ச்சி செய்யும் இயந்திரத்தை திறந்துவைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் மாசு கட்டுப்பாட்டுவாரியம் சார்பாக இத்திட்டம் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அன்றாடும் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டினை குறைத்து மாசுயில்லா மாவட்டமாக திகழ வழிவகுக்கும். மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் துணிப்பைகளின் பயன்பாட்டினை ஊக்கு விக்கும் வகையில் துணிப்பை விநியோகிக்கும் இயந்திரமும் திறந்துவைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டஆட்சித்தலைவர் மு.பிரதாப்.இ.ஆ.ப தெரிவித்துள்ளார்கள்.

    முன்னதாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூய்மை உறுதிமொழியேற்று ஏற்று, விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்ததார். 400-க்கும் மேற்ப்பட்ட ஜி.ஆர்,டி மற்றும் வேல்ஸ் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துக்கொண்டனர். 2000-த்திற்கும் மேற்ப்பட்ட துணிப்பைகளை மாவட்டம் முழுவதும் பொது மக்களுக்கு விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாசு கட்டுபாடு வாரிய சுற்றுச் சூழல் செயற்பொறியாளர் முனைவர் பா.செல்வ இளவரசி, செயல் அலுவலர் பி.ஆர்.பிரகாஷ் மற்றும் திரளான மாணவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    No comments