திருக்குவளை அருகே குருவை சாகுபடிக்கான தண்ணீர் கடைமடை பகுதிக்கு கிடைக்காததை கண்டித்து சாலை மறியல்
குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் முழுமையாக கிடைக்காததால் குறுவை தூத்துக்குடி-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் கீழையூர் கடைத்தெருவில் விவசாயிகள் மற்றும் சிபிஎம் கட்சியினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்கப்பட்ட நிலையில் நாகை மாவட்டம் கடைமடைக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தாலும் பல்வேறு வாய்க்கால்கள் கிளை வாய்க்கால்களுக்கு முழுமையாக நீர் சென்று சேராத காரணத்தால், குருவை நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காவிரி குண்டான் வாய்க்காலில் இருந்து பாசனம் பெறக்கூடிய கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பிடாகை, காரப்பிடாகை, மகிழி, திருப்பூண்டி, சிந்தாமணி, திருப்பூண்டி கிழக்கு என பல்வேறு கிராமங்களுக்கு போதுமான தண்ணீர் வந்து சேராத நிலையில் விவசாயிகள் டீசல் மோட்டார் மூலம் குறைந்த அளவு வாய்க்காலில் வந்த தண்ணீரை டீசல் மோட்டார் மூலம் வயல்களுக்கு பாய்ச்ச வேண்டிய அவல நிலை ஏற்பட்டதற்கு காரணம் முறையாக தூர் வரவில்லை என குற்றம் சாட்டும் போராட்டக்காரர்கள் தூர்வாராத வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தூத்துக்குடி-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் கீழையூர் கடைத்தெரு அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிஎம் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் விவசாய சங்க மாநில துணைத்தலைவர் வீ. சுப்பிரமணியன் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து விவசாயிகள் விவசாயி கூலி தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.சாலை மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் கவிதாஸ் தலைமையில் கீழையூர் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் பொதுப்பணி துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது .
மறியல் போராட்டத்தில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் என். பன்னீர்செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி.பழனிவேல்,எஸ்.டி. செல்வராஜ் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் பல பங்கேற்றனர்.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments