• Breaking News

    கும்மிடிப்பூண்டி: எளவூர் விவேகானந்தா பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான பாரம்பரிய விளையாட்டு போட்டி காந்தி உலக மையம் சார்பாக துவக்கப்பட்டது


    கும்மிடிப்பூண்டி அடுத்த எளவூரில் அமைந்துள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், மாநில அளவிலான  பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் காந்தி உலக மையம் சார்பாகவும் மற்றும் தி சென்னை சில்க்ஸ் இணைந்து நடத்தப்படும் இரண்டு நாள் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கப்பட்டது. இதில் யோகா, சிலம்பம், மல்லர் கம்பம் மற்றும் கரலாக்கட்டை போன்ற பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கிறார்கள். மேலும் இந்த நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டு வல்லுனர்களும், முக்கிய விருந்தினர்களும் பங்கேற்கின்றனர்.

    இது குறித்து இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் காந்தி உலக மையத்தின் நிறுவனர் ராஜேஷ் கூறியதாவது:

    “காந்தி உலக மையத்தின் முக்கிய நோக்கங்களில், பாரம்பரிய விளையாட்டுகளின் பாதுகாப்பும் மற்றும் பரவலாக்க நடவடிக்கைகளை எடுப்பதும் ஒன்று ஆகும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி - கும்மிடிப்பூண்டியில் தமிழ் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவுள்ளது, என்று கூறினார். இதில் சிறப்பு விருந்தினராக சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.



    No comments