• Breaking News

    சிவநாடானூரில் ரூ.36 லட்சத்தில் சமுதாய நலக்கூட கட்டிடப்பணி..... ஜெயபாலன், பழனிநாடார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்....


    சிவநாடானூரில்  ரூ.36 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்டிட  அடிக்கல் நாட்டு விழாவில் பழனிநாடார் எம்.எல்.ஏ., திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டனர்.

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், சிவநாடானூர் ஊராட்சி சிவநாடானூரில் ஊராட்சி ஒன்றிய நிதி ரூ.26 லட்சம், சட்டமன்ற உறுப்பினர் பொது நிதி ரூ.10 லட்சம் என ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. யூனியன் சேர்மன் சீ.காவேரிசீனித்துரை தலைமை வகித்தார். யூனியன் துணை சேர்மன் முத்துகுமார், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலர் அருமை கண்ணன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி வரவேற்றார்.

    தென்காசி எம்.எல்,ஏ. பழனிநாடார், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் சீனித்துரை, ரமேஷ், பொன்செல்வன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பத்மநாதன் (எ) கோபு, திமுக மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மாரியப்பன் மற்றும் லெட்சுமண பெருமாள், அய்யாத்துரை, அண்ணாத்துரை, சமுத்திரம், முருகேசன், ராஜன், தங்கப்பழம், ராஜரத்தினம், ராமர், கதிரேசன், செல்லச்சாமி, முருகன், சண்முகம், ஜெயசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    No comments