• Breaking News

    கடைமடையான நாகை வந்து சேர்ந்த காவிரி நீர்...... நெல் மணிகள், பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்ற விவசாயிகள்......


    டெல்டா பாசனத்திற்காக ஜூன்.12 மேட்டூர் அணை  திறக்கப்பட்ட நிலையில் காவிரி நீர் கல்லணை வழியாக தற்பொழுது காவிரி கடைமடையான நாகை மாவட்டத்திற்கு வந்து சேர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த  ஏர்வைக்காடு கதவணை பகுதிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்ததை தொடர்ந்து  தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் எஸ். ஸ்ரீதர் தலைமையிலான விவசாயிகள்  நெல்மணிகள் மற்றும் மலர் தூவி உற்சாகமாக வரவேற்று சூரிய பகவானை வழிப்பட்டனர்.

    கோடை மழை கை கொடுத்த வேளையில் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டு வரும் சூழலில் காவிரி கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்ந்துள்ளதை நீர்வளத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் 20000 கன அடி வீதம் தொடர்ந்து பத்து தினங்களுக்கு தண்ணீர் திறந்து விட  எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி  சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட இணைச்செயலாளர்  கவிராஜ், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், கீழையூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் பாரூக் முகமது, ஒன்றிய துணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

    கீழ்வேளூர் தாலுக்கா நிருபர்  த.கண்ணன் 

    No comments