திருக்குவளை ஐடிஐயில் சர்வதேச யோகா தின விழா
ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருக்குவளை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மூன்று நாட்கள் யோகா பயிற்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கே.எஸ். வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்,திருத்துறைப்பூண்டி அறக்கட்டளையின் சார்பில் யோகா பயிற்சியாளர்களாக பேராசிரியர்கள் பெரியமாயன், மதிவாணன் ஆகியோர் பங்கேற்று இங்கு பயிலும் 140 மாணவர்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சி அளித்தனர். தொடர்ந்து நிகழ்வில் உடல் ரீதியிலான பிரச்னைக்கு மருந்துகள் பல உள்ளன.
ஆனால் மன ரீதியிலான பிரச்னைக்கு ஒரே தீர்வு யோகா மட்டுமே. இந்தியாவின் மிகச் சிறப்பு வாய்ந்த பழைமையான கலைகளில் ஒன்று. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், உலக அளவில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி அனைத்து நாடுகளிலும் சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது என மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.
இதில், ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று யோக ஆசனங்களை செய்து காண்பித்தனர். இந்நிகழ்வில் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தியாக சுந்தரம், ஊராட்சி செயலர் மதிவாணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments