• Breaking News

    கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண்..... 7 பேரை கைது செய்தி போலீஸ்.....

     


    திண்டுக்கல் மாவட்டம் பீரங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி பச்சையம்மாள் அப்பகுதியில் இருந்த தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களிடம் அதிக வட்டி கிடைக்கும் என கூறி பச்சையம்மாள் பணம் வசூல் செய்து நிதி நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக தெரிகிறது.

    கடலூர் சில மாதங்களுக்கு முன்பு அந்த நிதி நிறுவனம் மூடப்பட்டதால் பொதுமக்கள் பச்சையம்மாளிடம் வந்து பணத்தை கேட்டுள்ளனர். இது தொடர்பாக பச்சையம்மாள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் பலமுறை புகார் கொடுத்துள்ளார்.

    தினமும் பணம் கொடுத்தவர்கள் பச்சையம்மாளின் வீட்டிற்கு வந்து பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் இருந்த பச்சையம்மாள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் பச்சையம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆண்டிச்சாமி (55), துரைராஜ் (63), முத்துச்சாமி (50). செல்லம் (58), கண்ணன்(47), வீரப்பன் (52) தயாளன் (45) ஆகிய 7 பேரை கைது செய்து நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    No comments