80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்..... வாலிபரை சுட்டுப்பிடித்த போலீசார்.....
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கதக்க 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த மூதாட்டியை தாக்கியது. பின்னர் அவர்கள் மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் மூதாட்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மூதாட்டி அணிந்திருந்த ¾ பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது. இதற்கிடையே அந்த வழியாக சென்ற பொதுமக்கள், மூதாட்டி காயமடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து அவர்கள், மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவர் காடாம்புலியூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் காடாம்புலியூரில் உள்ள முந்திரி காட்டுக்கு சென்ற போலீசார் சுந்தரவேலை சுற்றி வளைத்தனர். அப்போது வாலிபர் சக போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.இதனை சுதாரித்துக்கொண்ட பண்ருட்டி ஆய்வாளர் வேலுமணி துப்பாக்கியால் சுந்தரவேலின் காலில் சுட்டார்.
இதில் அவரது இடது காலில் குண்டு பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து சுந்தரவேலை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுந்தரவேல் தாக்கியதில் காயமடைந்த 2 போலீசாரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
No comments