ஓபிஎஸ் எம்எல்ஏ பதவி தகுதிநீக்கம்..? சபாநாயகர் ஆலோசனை - MAKKAL NERAM

Breaking

Sunday, June 15, 2025

ஓபிஎஸ் எம்எல்ஏ பதவி தகுதிநீக்கம்..? சபாநாயகர் ஆலோசனை

 


தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் சபாநாயகர் அப்பாவுவிட புகார் மனு அளித்துள்ளார்.

போடிநாயக்கனூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வான ஓ.பன்னீர்செல்வம், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதால், அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் மிலான குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போதே, அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் அரசியலமைப்பு சட்டத்தின் 10-வது அட்டவணை பிரிவு 2/1-ன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்தை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என போடிநாயக்கனூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான மிலானி கோரிக்கை விடுத்துள்ளார்.

மிலானியின் மனு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து சபாநாயகர் அப்பாவு உரிய நடவடிக்கை எடுப்பார் என சட்டப்பேரவை செயலகம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மனு தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment