புனேவில் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து..... ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்..... - MAKKAL NERAM

Breaking

Sunday, June 15, 2025

புனேவில் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து..... ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்.....

 


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்திராயானி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே சுமார் 60 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் பாலத்தின் மீது இருந்துள்ளனர்.

இதனால் அதிக எடை மற்றும் பழமையான பாலம் என்பதால் இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளில் 10 முதல் 15 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment