• Breaking News

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல் நல குறைவு..... அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு.....

     


    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியதாவது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால் அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    எனவே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்த அனைத்து அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments