தென்காசி மாவட்டத்திற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும்..... அமைச்சர் சிவசங்கரிடம், சிவபத்மநாதன் கோரிக்கை.... - MAKKAL NERAM

Breaking

Monday, June 23, 2025

தென்காசி மாவட்டத்திற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும்..... அமைச்சர் சிவசங்கரிடம், சிவபத்மநாதன் கோரிக்கை....


தென்காசி மாவட்டத்திற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும் என அமைச்சர் சிவசங்கரிடம், சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், தமிழக போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் புதியதாக தோற்றிவிக்கப்பட்டு சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. தென்காசி மாவட்டத்திற்கு ஒவ்வொரு அரசு அலுவலங்களும் தனி தனியாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றது. ஆனால் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகமானது தற்போது வரை சுமார் 55 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலியில் இயங்கி வருகிறது.

ஒவ்வொரு முறையும் தென்காசி, சங்கரன் கோவில், கடையநல்லூர் மற்றும் ஆலங்குளம் மின் கோட்டங்களை சார்ந்த மின் நுகர்வோர்கள் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு செல்லும்போது காலவிரையம் ஆகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மேற்பார்வை பொறியாளர் அலுவலங்கள் இருக்கும் போது தென்காசி மாவட்டத்திற்கு என்று தனியாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இருக்க வேண்டும். ஆகையால் திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் தற்சமயம் உள்ள தென்காசி கோட்டம், கடையநல்லூர் கோட்டம், சங்கரன்கோவில் கோட்டம் மற்றும் ஆலங்குளம் கோட்டம் ஆகிய 4 மின் கோட்டங்களை ஒருங்கிணைத்து மேற்பார்வை பொறியாளர், தென்காசி மின் பகிர்மான வட்டம் புதியதாக தோற்றுவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்;,  தலைமையிடத்து தலைமை பொறியாளரிடமும் மனுவினை வழங்கினார். அப்போது மாவடட் அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, கடையநல்லூர் முன்னாள் ஒன்றிய  செயலாளர் காசி தர்மதுரை, மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment