விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருக்குவளை கருணாலயம் முதியோர் இல்லத்தில் தவெக சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Monday, June 23, 2025

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருக்குவளை கருணாலயம் முதியோர் இல்லத்தில் தவெக சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது


திருக்குவளை அருகே நாட்டிருப்பு பகுதியில்  தவெக  தலைவர் விஜய் 51 வது  பிறந்தநாளை கேக் வெட்டி,சுமார் 50 குடும்பங்களுக்கு வீடு வீடாகச் சென்று கொய்யா கன்று மற்றும் முதியோர் இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை உணவு  வழங்கப்பட்டது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 51வது  பிறந்தநாள் விழாவினை  அக்கட்சியினர் பல்வேறு இடங்களில்  கொண்டாடி  வருகின்றனர் .அதன் ஒரு பகுதியாக தவெக சார்பில்  நாகை மாவட்டம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு பனையூர் ஊராட்சி நாட்டிருப்பு கிளை சார்பில் திருக்குவளையில் உள்ள  கருணாலயம்  முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

தெற்கு ஒன்றிய செயலாளர் கே. சத்யராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கேக் வெட்டியும்  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து வீடுகள் தோறும் பயன் தரும் கொய்யா கன்றுகள் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக நாட்டிருப்பு  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் தவெக கீழ்வேளூர்   ஒன்றிய பொருளாளர் என்.வி.டி.பாலமுருகன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் எஸ். முருகானந்தம், வீ. காமராஜ், ஊராட்சி செயலாளர் பால்ராஜ் சிங்காரவேல்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 


கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்




No comments:

Post a Comment