• Breaking News

    கொடைக்கானலில் சுற்றுலா செல்ல தடை

     


    தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதி பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கே உள் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வருகை புரிந்து மலையின் அழகை ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    அங்கு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குணா குகை, மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி, பைன் பாரஸ்ட், பில்லர் ராக் போன்ற பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வனவிலங்குகளின் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    No comments