• Breaking News

    24 தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..... கட்சிகள் விவரம்

     


    கடந்த 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தை சேர்ந்த 24 பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க, தமிழக தேர்தல் கமிஷனருக்கு தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.

    அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டதும் அரசியல் கட்சிகள்

    1. வருமான வரி விலக்கு

    2. அங்கீகாரம்

    3. பொது சின்னம்ஒதுக்கீடு

    4. நட்சத்திர வேட்பாளருக்கான பிரதிநிதித்துவம் ஆகிய சலுகைகளை அனுபவித்து வருகின்றன.


    தேர்தல் கமிஷன் நடத்தும் தேர்தல்களை சந்திக்கவே இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி ஏராளமான அரசியல் கட்சிகள் பதிவு செய்தன.

    ஆனால், கடந்த 2019 முதல் 6 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்பது கவனத்திற்கு வந்துள்ளது.அவற்றில் பல கட்சிகள் இல்லாமல் போய்விட்டன. தேர்தலில் போட்டியிடாத கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதுடன் அது குறித்து மாநில மற்றும் தேசிய அளவிலான பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும்.

    அக்கட்சிகளிடம் விளக்கம் பெற்ற பிறகு, ஒரு மாதத்திற்குள் , பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து அக்கட்சிகளை நீக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.





    No comments