• Breaking News

    நாகை அருகே பல மாதங்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்..... மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த நபரால் பரபரப்பு.....


    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல வெண்மணி சர்ச் தெருவில் சுமார் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல ஆண்டுகளாகவே குடிநீர் பிரச்சனை தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பல மாதங்களாக தொடர்ச்சியாக குடிநீர் முறையாக வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் இன்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

    சாலையில் காலி குடங்களை அடிக்கி தரையில் அமர்ந்து  ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், முறையாக தண்ணீர் வழங்காத குடிநீர் வாரியத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். 3 மணி நேரமாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டும் உரிய அதிகாரிகள் யாரும் வராததால்  ஆத்திரமடைந்த ஒருவர் திடிரென  மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது. அப்போது அவரிடமிருந்து போலிசார் பாட்டிலை பிடிங்கிய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதிவாசிகள் தெரிவித்த போது குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் தினந்தோறும் அவதிப்படுவதாகவும், இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காமல் இந்த பகுதியை தொடர்ந்து புறக்கணித்து அலட்சியப்படுத்துவதாவும் வேதனை தெரிவித்தனர்.

     குடிநீர் கேட்டு பொது மக்கள்  காலை நேரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் கீழ்வேளூர் கச்சனம் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கும் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன் 

    No comments