கலைஞர் மு.கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Tuesday, June 3, 2025

கலைஞர் மு.கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது


திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி 102 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம் வெண்மணியில் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணியினர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.பி.ஜோதி என்கின்ற பரஞ்ஜோதி சார்பில்  மாற்றுத்திறனாளிகள் அமரக்கூடிய இரும்பு பெஞ்ச், ஊராட்சியில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு தொப்பி, கையுறை, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும், அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 

இதில் திமுக தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கே.மதியழகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.மணிக்கண்டன்,  முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.மகாதேவன், இளைஞரணி து.அமைப்பாளர்கள் சீனிவாசன், வேல்முருகன், ரமேஷ், தளபதி தினேஷ்  உள்ளிட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் செய்தியாளர் சக்கரவர்த்தி


No comments:

Post a Comment