ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியினை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார்
ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தனது சொந்த செலவில் காமராஜர் சிலை முன்பு பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
ஆலங்குளத்தில் பேருந்து நிலையத்தின் கீழ் பகுதியில் பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை அமைந்துள்ளது. இங்கு ஜுலை 15ந் தேதி காமராஜர் பிறந்த தின விழா சிலை பராமரிப்பு குழு மற்றும் பல்வேறு தரப்பினர் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் காமராஜர் சிலை முன்பு சாலையில் பேவர் பிளாக் கல் பதித்திட வேண்டுமென எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தனது சொந்த செலவில் அமைத்து தருவதாக உறுதியளித்து, அதற்கான பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சிலை பராமரிப்பு குழு நிர்வாகிகள் கே.எஸ்.குமார், தமிழரசன், வக்கீல் ராஜா தங்கம், கணேசன், கண்ணன். பிரகாஷ், யோகராஜா, ஜெயபாலன், சோனா மகேஷ், அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments