• Breaking News

    நாகை: தேவூரில் முழுவதுமாகவே கருங்கற்களால் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு தேவவாரணப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷகம்


    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் பழமை வாய்ந்த அருள்மிகு தேவவாரணப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தை புணாரவர்த்தனம் செய்யப்பட்டு முழுவதுமாகவே கருங்கற்களால் புதிதாக கட்டப்பட்டு இன்று மகா கும்பாபிஷகம் நடைப்பெற்றது. கும்பாபிஷக விழா கடந்த 25 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 

    தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்று வந்தது. இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை காண்பிக்கப்பட்டு கடம் புறப்பாடு நடைப்பெற்றது. மங்கல வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியர்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை' வந்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷகம் நடைப்பெற்றது. 

    தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிள்ளையார் மற்றும் சிவன், பார்வதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன் 


    No comments