• Breaking News

    ஆவுடையானூர் பள்ளியில் போதை பொருள் எதிர்ப்பு தின விழா,விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது


    ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் எதிர்ப்பு தின விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.

    ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான தின விழா நேற்று நடைபெற்றது. பள்ளி நிர்வாகி அந்தோனி குரூஸ் தலைமை வகித்தார்.  பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பட்டு ராஜ் பங்கேற்று போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் குறித்து பேசியதுடன், மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார். முன்னதாக போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இதில் கீழப்பாவூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீமூலநாதன் மருத்துவ அலுவலர் கண்ணன்,ஒன்றிய கவுன்சிலர் இராம. உதயசூரியன், ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி, துணைத் தலைவர் செல்வமேரி, ஊராட்சி செயலர் தங்க செல்வன், ஊராட்சி மன்ற அலுவலக பணியாளர்கள் புஷ்பகலா, ஜெயமேரி, ஆசிரியர்கள் ஜானி, அலெக்ஸ், ஸ்டெனிலா மேரி, அன்னா மேரி,சாரணர் படை பொறுப்பு ஆசிரியர் ஜஸ்டின், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மன்ற பொறுப்பு ஆசிரியர் ஜேம்ஸ் பாஸ்கர், தேசிய மாணவர் படை உதவி அலுவலர் அந்தோணி சவரிமுத்து, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தங்கதுரை மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி அருள் பிரதீப்  மற்றும்  அனைத்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    No comments